September 2011
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, September 30, 2011

அகங்கார ஜெயலலிதாவிற்கு புத்தி புகட்டிய கிராமத்தான்




அகங்கார ஜெயலலிதாவிற்கு புத்தி புகட்டிய கிராமத்தான்

ஒரு முறை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கிராமம் வழியாகச் செல்வதற்கு நேர்ந்தது.அந்தக் கிராமத்தின் சார்பாக யாராவது ஒருவரிடம் பேச ஆசைப்பட்டார் முதலமைச்சர்.அந்த  கிராமத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு முதியவர் ஒருவரை  முதலமைச்சரிடம் பேச தேர்ந்தெடுத்தனர் கிராம மக்கள்.ஆனால் முதியவர்க்கு சிறிது தயக்கம் இருந்தது.

முதல்வரிடம் நான் எப்படிப் பேசுவது? அவர் தமிழக முதலமைச்சர் , நான்  சாதாரண கிராமத்து மனிதன்'.இதற்கு தமிழக முதலமைச்சர்  ஆலோசகர்கள் ஆலோசனை கூறினர். முதலமைச்சர்  என்னென்ன கேள்விகள் கேட்பார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் கூற வேண்டும் என்பதை நாங்கள் உங்களிடம் கூறி விடுகிறோம், அதன்படி நீங்கள் பதில் சொன்னால் போதும் என்ற முதலமைச்சர்  ஆலோசகர்களின் யோசனையை முதியவர் ஒத்துக்கொண்டார்.

முதலமைச்சர்  ஆலோசகர்கள் " முதல்வர்  கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதில் எப்படிச் சொல்வது?" என்பதற்கான வகுப்பினை நடத்தினர்."ஐயா, முதலமைச்சர் உங்களிடம் முதல் கேள்வியாக தாங்கள் எத்தனை வருடங்களாகத் தியானம் செய்து கொண்டு வருகிறீர்கள்?" என்று கேட்பார். அதற்குத் தாங்கள் 15 வருடங்களாக என்று கூறவேண்டும், சரியா?"


"
முதல் கேள்விக்கு 15 வருடங்கள் என்று பதில் சொல்லவேண்டும், அவ்வளவுதானே! சரி, அடுத்த கேள்வி என்ன?"
"
இரண்டாவது கேள்வியாகத் தங்களுக்கு எத்தனை வயது?" என்று கேட்கப்படும். அதற்குத் தாங்கள் 60 வருடங்கள் என்று பதில் சொல்ல வேண்டும், சரியா ஐயா"


"
இரண்டாவது கேள்விக்கு 60 வருடங்கள் என்று பதில் சொல்ல வேண்டும், சரி எனக்கு ஒரு சந்தேகம்?""கேளுங்கள்"
"
எனக்கு வகுப்பு எடுத்தது போலவே முதலமைச்சரிடமும் கூறிவிட்டீர்களா?"

கூறிவிட்டோம், இந்தக்கிராமம் படிப்பறிவு அற்ற ஏழைகள் நிறைந்த கிராமம், யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. முதியவர்  ஒருவருக்கு மட்டுமே ஒரளவு தெரியும். எனவே இந்தக் கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் எனவும், இந்த வரிசையில் மட்டுமே  கேள்விகளை கேட்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கூறிவிட்டோம். நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை  என்று மேலும் சில கேள்விகளை சொல்லி கொடுத்தனர்.

முதலமைச்சர் ஆலோசகர்கள் கூறியபடியே முதியவர் செயற்படுவது என்று முடிவு செய்தார்.அதைப் போலவே முதலமைச்சரிடமும் இது குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.முதலமைச்சரும் அவ்வூருக்கு வந்தார்.ஆலோசகர்கள் சொன்ன கேள்விகளை முதலமைச்சர் ஞாபகத்தில் வைத்திருந்தார், ஆனால் எந்தக் கேள்வியை முதலில் கேட்பது என்பதை மறந்து விட்டார். அருகில் உள்ள ஆலோசகர்களைக் கேட்க மனதினுள் அகங்காரம் தடை போட்டது.(ஜெயலலிதாவுக்கு அழகே அகங்காரம்தானே)

"
முதியவரே உங்கள் வயது என்ன?"இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது, இரண்டாவதாக கேட்க வேண்டிய கேள்வியை முதலமைச்சர் முதல் கேள்வியாகக் கேட்டு விட்டார். முதியவரோ முதல் கேள்விக்கு 15 வருடங்கள், இரண்டாவது கேள்விக்கு 60 வருடங்கள் என மட்டுமே ஞாபகத்தில் வைத்திருந்தார்.

"15
வருடங்கள்" முதல் கேள்விக்கு முதியவர் பதில் சொல்லிவிட்டார்.

முதலமைச்சருக்கு தலை சுற்றியது! பார்ப்பதற்கு 60 வயதானவராகத் தோன்றுகிறார்! ஆனால் 15 வருடங்கள் என்கிறாரே! முதலமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை!இரண்டாவது கேள்வியை கேட்டார்.

"
முதியவரே, தாங்கள் எத்தனை வருடங்களாகத் தியானம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?"முதியவரிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது."60 வருடங்கள்"

முதலமைச்சருக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது. முதியவரே, உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?""நிச்சயமாக எனக்கு இல்லை முதல்வரே! உங்களுக்குத்தான் என்று நினைக்கிறேன்"

"
என்ன சொல்கிறீர்கள்?" முதல்வர் வெகுண்டெழுந்தார்.

"
முதலமைச்சரே! எனக்கு எந்த வரிசையில் பதில்கள் சொல்லப்பட்டனவோ, அதே வரிசையில்தான் உங்களுக்கு கேள்விகளும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் அதன்படி கேட்காமல் மாற்றிக் கேட்டுவிட்டதை இப்போது உணர்கிறேன். தவறு செய்தது நானல்ல, எனக்கு என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ, அதன்படியே நான் நடந்துள்ளேன். நீங்கள்தான் மாற்றி நடந்துவிட்டீர்கள்.
எனவேதான் எல்லாக் குழப்பமும் நடந்துவிட்டது!"

முதலமைச்சர் திகைத்தார் முதியவர் சொல்வதைப் பார்த்தால் மிகச் சிறந்த ஞானி போலத் தெரிகிறது. நான் மாற்றிக் கேள்விகள் கேட்டிருந்தாலும், பதில்களைச் சரியாகச் சொல்லியிருக்கலாமே!

"
முதியவரே! தங்களுடைய விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. தாங்கள் கூறியது போலவே, நான் கேள்விகளை மாற்றி கேட்டிருக்கலாம் தாங்கள் அதற்குச் சரியான பதில்களைக் கூறியிருக்கலாம் அல்லவா? ஏன் கிளிப் பிள்ளை போல் பதிலைத் தந்தீர்கள்?"

"
எனக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை அப்படி! இப்போது நாம் இருவரும் ஒன்று செய்யலாம். நாம் இருவரும் கூடிப் பேச வேண்டும். இந்த கிராமத்தைப் பற்றிப் பேச வேண்டும் அவ்வளவுதானே"

"
ஆமாம் முதியவரே! அதற்காகத்தான் நான் வந்துள்ளேன்""அப்படியானால், நாம் இருவரும் நம் முகமூடிகளைக் கழற்றிவிடவேண்டும்"

"
முகமூடிகளா!"

"
ஆமாம், தாங்கள் முதலமைச்சர் என்ற முகமூடியை அணிந்துள்ளீர்கள், நானோ 'புத்திசாலி'என்ற முகமூடியை அணிந்துள்ளேன்! இருவரும் ஏதோ ஒருவித முகமூடிகளை அணிந்துள்ளோம். அந்த முகமூடிகளை நாம் கழற்றிவிடுவோம். நான் இந்த கிராமத்தை சேர்ந்த மனிதன். தாங்கள் வேறு கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த முறையில் மனம்விட்டு வெளிப்படையாக இயல்பாகப் பேசுவோம். எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். முகமூடிகளை அணிந்துள்ளவரையில் பிரச்சனைகளும், சங்கடங்களும், இடைஞ்சல்களும் தீர்க்கப்படாது,  வளர்ந்துகொண்டுதான் இருக்கும்".

முதியவர் கூறியது உண்மைதான். "நாம் அனைவரும் நமது அகங்காரத்திற்கேற்ப ஒவ்வொரு முகமூடியை அணிந்துள்ளோம். அதன்காரணமாகவே மற்றவர்களுடன் ஒத்துப்போக மறுக்கிறோம்.

நமது முகமூடியை நாம் கழற்றிவிட்டால், நமது அகங்காரமும் விட்டுப்போகும். அகங்காரம் வெளியேறிவிட்டால், நமது இயல்புத் தன்மை நம்மிடம் இருந்து வெளிப்படும். எல்லாவற்றிற்கும் மேலான சக்தி மனிதர்க்கு வழங்கிய பெருங்கொடை நமது அகங்காரமற்ற இயல்பே.



இது போல நாம் அணிந்திருக்கும் முகமுடிகளை தூக்கி எறிந்துவிட்டால் வாழ்வில் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.



நாம் முயற்சி செய்து பார்க்கலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்களேன்



நான் படித்த முல்லா கதையைமாற்றி எனது வழியில் நான் கொடுத்துள்ளேன்


மேலும் தொடர்ந்து படிக்க…(Read more)
>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (202) தமிழ்நாடு (110) அரசியல் (96) பெண்கள் (76) சிந்திக்க (68) அமெரிக்கா (60) இந்தியா (59) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (45) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (30) மனைவி (28) கலைஞர் (26) வாழ்க்கை (26) அனுபவம் (25) கணவன் (23) சமூக பிரச்சனை (23) இந்தியன் (22) தேர்தல் (20) ஆண்கள் (19) செய்திகள் (19) உபயோகமான தகவல்கள் (18) மொக்கைகள் (18) யோசிங்க (18) எண்ணங்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) புது தகவல்கள் (17) உணர்வுகள் (16) குடும்பம் (16) ஹெல்த் டிப்ஸ் (16) காதல் (14) சினிமா (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) விகடன் (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) சட்டம் (12) மகளிர் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) இழப்பு (11) கேள்வி பதில் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) குற்றம் (10) கேள்விகள் (10) கொடுரம் (10) தலைவன் (10) மரணம் (10) வாழ்க்கை அனுபவம் (10) வேதனை (10) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குழந்தை வளர்ப்பு (9) தகவல்கள் (9) திமுக (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தைகள் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உங்களுக்கு தெரியுமா (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) டெக்னாலாஜி (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) அறிவியல் (6) இளஞிகள் (6) எச்சரிக்கை (6) கிறுக்கல்கள் (6) சக்தி வாய்ந்த நாடு (6) சமையல் குறிப்பு (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) விஞ்ஞானம் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உலகம் (5) கட்சி (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) காங்கிரஸ் (5) கோயில்கள் (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) Award (3) NRI (3) THE WHOLE TRUTH (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கதை (3) கற்பழிப்பு (3) சீனா (3) செக்ஸ் (3) தந்தையர் தினம் (3) தரமான பதிவுகள் (3) தொழில் நுட்பம் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பிறந்தநாள் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மதுரை (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) ரெசிப்பி (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எம்.ஜி.ஆர் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோபம் (1) கோலம் (1) சக்கேடா (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிதம்பரம் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சிறை கோர்ட் (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஞானாலயா (1) டான்ஸ் (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) விஸ்வரூபம் 2 (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)